நண்பர்கள் தினத்தில் ஒரு திருவிழா !
வலையுலகில் தமிழ் பதிவர்களின் வழி தனி வழிதான். அனைத்துப் பதிவுகளையும் ஒருங்கிணைக்கும் திரட்டிகள் ஆயிரம் பதிவர்களையும் ஒரு குடும்பத்தினராக அடையாளம் ஏற்படுத்தின. முன்பின் அறியாதவரும் பதிவர் என்று அறிமுகமானால் ஏதோ பலகாலம் பழகியவர் போன்று அளவளாவுதல் இயல்பாக போயிற்று. பதிவர்கள் சந்திப்பு போண்டாவிலும் போட்டோ பகிர்விலும் ஆரம்பித்து இன்று தமிழ்ப்பதிவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக முன்னேறியுள்ளது. மே மாத கோவை பதிவர் பட்டறை நுட்பங்களையும் சமூக அக்கறையையும் பகிரும் சந்திப்பாக அமைந்து வருங்காலத்திற்கு முன்னோட்டம் விட்டது.
அதையொட்டி ஆகஸ்ட் 5 இல் சென்னையில் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் பட்டறை தமிழில் வலைபதிவோருக்கும் புதிதாய் பதிய விரும்புவோருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை ஒருங்கிணைக்கும் குழுவினரின் சுறுசுறுப்பும் ஆர்வமும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது.
சென்னையிலுள்ளவர்களும் சென்னைக்கு செல்கின்றவர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வாகும். நண்பர்கள் தினத்தில் நட்பு வட்டத்தை பெரிதாக்க நல்ல வாய்ப்பு, தவற விடாதீர்கள். மும்பையிலிருந்து கொண்டு என்னால் பெருமூச்சுதான் விட முடிகிறது. இளைஞர்கள் நடத்தும் இத்திருவிழா வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
பட்டறையின் குறிக்கோள்கள்:
* வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
* பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
* புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
* பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
* பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
நாள்: 05 ஆகஸ்ட் 2007
நேரம்: 09.30-17.30
இடம்: தமிழ்த் துறை அரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா கடற்கரை வளாகம். திருவள்ளுவர் சிலை எதிரில்
பேருந்து நிறுத்தம்: கண்ணகி சிலை நிறுத்தம். பேருந்துகள்: 21G, 21L, 21P, 21E, 21H, 21K, PP21, PP19, 6D, 6E, 6A, 2A
மிக அண்மையிலுள்ள தொடர்வண்டி நிலையம்: திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம், பல்கலைக்கழக மெரினா வளாகத்துக்கு பின்னாலேயே திருவல்லிக்கேணி தொடர்வண்டி நிலையம் உள்ளது. தொடர்பு கொள்ள: தமிழ் வலைபதிவர் பட்டறை
பதிந்தது மணியன் நேரம் 20:38 என்றும் சுட்டிட 4 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: நிகழ்ச்சிகள், பதிவர் வட்டம்
ஒரு மொழியால் பிரிந்தவர்கள்
பிரித்தானியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மொழி ஒன்றே யானாலும் அவர்களின் பாவனையில் தான் எத்தனை வேறுபாடு ? ஜார்ஜ் பெர்னாட் ஷா இதனைக் குறிப்பிட்டு இங்கிலாந்தும் அமெரிக்காவும் பொதுமொழியால் பிரிந்த நாடுகள் ("England and America are two countries separated by a common language.") என்று கூறியுள்ளார். இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண இன்றைய யாஹூ தேர்வுகளில் படித்த இந்தப் பதிவை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.எடுத்துக்காட்டாக ஆங்கிலேயர்களுக்கு Wayout "வெளியே" என்றால் அமெரிக்கர்கள் வேறெங்கோ சஞ்சாரிக்க பொருள் கொள்வார்கள். இதுபோலவே mind vs watch, badge vs button, and peanuts vs monkeynuts. தவிர கடைகளுக்குச் சென்றாலோ பெண்கள் துணிமணிகள் என்றாலோ கேட்கவே வேண்டாம்.
பதிந்தது மணியன் நேரம் 14:02 என்றும் சுட்டிட 1 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: சுட்டுதல்கள்
02:03:04 05/06/07
இந்திய முறையில் நாளையையும் வேளையையும் குறிப்பவர்களுக்கு, இன்று மதியம் இரண்டுமணி மூன்று நிமிடம் நான்கு மணித்துளிகள் சிறப்பானது. அப்போது நேரக் குறிப்பு இவ்வாறு இருக்கும்: 02:03:04 05/06/07. இன்று அதிகாலையிலும் இவ்வாறு இருந்திருக்கும். அந்த நேரத்தை உறக்கத்தில் கழித்தவர்கள் இந்த சிறப்பு நேரத்தை எதிர்நோக்குங்குங்கள்.
பதிந்தது மணியன் நேரம் 08:45 என்றும் சுட்டிட 0 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: உப்புமா
தொலைத்த இடம் தேடுகிறேன் !
இன்று வந்த மின்னஞ்சலில் இந்த புதிரைப் பார்த்தேன். மின்னஞ்சல்படி MIT பேராசிரியர் ஒருவர் (Pro. John Mentriffe) இந்தப் புதிரை வெளியிட்டதாகத் தெரிகிறது. அவர் நாம் கற்ற செங்கோண முக்கோணங்களின் விதிகளை யெல்லாம் கட்டுடைக்கும் புதிய கொள்கையை விளக்கும் விதமாக இந்தப் புதிரை கொடுத்துள்ளாராம்.
கணிதப்புலிகள் உலாவும் தமிழ் பதிவுலகில் இதில் எங்கு வழு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடுகையை இடுகிறேன். விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
பதிந்தது மணியன் நேரம் 19:19 என்றும் சுட்டிட 4 மறுமொழிகள்
அமெரிக்க பதிவர்களுக்கு 12 கட்டளைகள்
அமெரிக்க சட்டங்களை மீறாமல் பதிவுகள் எழுத கீழ்வரும் சுட்டியில் பனிரெண்டு சட்டங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன. நேரமின்மையால் மொழி பெயர்க்க வில்லை. மன்னிக்கவும்.
Blog Law » 12 Important U.S. Laws Every Blogger Needs to Know
இது அமெரிக்கபதிவர்கள் என்றில்லாமல் நம் அனைவருக்குமே பொருந்தும். இதுபற்றி /. இல் நடக்கும் விவாதம் இது. நமது ஆக்கங்கள் பிற பதிவுகளையோ பிற ஊடக உள்ளடக்கங்களை சு(ட்)டும் போது கை சுட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர பதிவிற்கு வருவோரின் தனிப்பட்ட விவரங்களை பதிவதிலும் பகிர்வதிலும் கவனம் தேவை.
பதிந்தது மணியன் நேரம் 18:37 என்றும் சுட்டிட 3 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: பதிவர் வட்டம்
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
கதிரவன் மேட இராசியில் காலடி வைக்கின்ற சித்திரை முதல்நாளிலே பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வசந்தத்தின் நுழைவாயில் வாழ்விலும் வசந்தம் வீச வழிகோலட்டும்;
விரும்பியன வாய்த்தலும் வெற்றிகள் வந்தடைதலும் வேலவன் அருளால் நிறைவேறட்டும்!!
பதிந்தது மணியன் நேரம் 16:15 என்றும் சுட்டிட 3 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: புத்தாண்டு, வாழ்த்துக்கள்
தேசப்பற்று பற்றாக்குறை ?
இந்தியாவின் இரண்டு பிரபலங்களின் நடத்தையைக் கண்டு திகைத்து நிற்கிறது நாடு. கிரிக்கெட் இந்தியாவின் சமயம் என்றால் டெண்டுல்கர் எங்கள் தெய்வம் எனக் கொண்டாடியவர்களும் புதிய இந்தியாவின் சிற்பி, நாராயணமூர்த்தி எங்கள் வருங்கால குடியரசுத் தலைவர் என்று கொண்டாடியவர்களும் முக்காடு போட்டு திரிய வேண்டியதாயிற்று.
சச்சின் தேசியக் கொடி வண்ண கேக்கை வெட்டினாராம்; நாராயணமூர்த்தி நாட்டுப்பண்ணை மற்றவர்களுக்கு முன் பாட தயங்கினாராம். இருவருமே தங்களது ஊடகத்தினால் வளர்க்கப் பட்ட மாயபிம்பத்தை தக்கவைத்துக் கொள்ள விளக்கங்களும் மன்னிப்புகளும் அளித்துள்ளனர்.
தனது ஹெல்மெட்டில் நாட்டுக் கொடியின் வண்ணங்கள் பதிய போராடிய டெண்டுல்கரா இவ்வாறு நடக்கக் காரணங்கள் என்ன ? இந்திய பொருளாதாரத்திற்கே ஒரு வழிமாற்றம் தந்து தற்போதைய குடியரசுத்தலைவராலேயே அடுத்து அவர் வருவதற்கு 'fantastic '
என பாராட்டு பெற்றவர் தடுமாற காரணம் என்ன ? மக்கள் தங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை மறந்திருந்தாலும் உள்ளத்தில் நாட்டுப்பற்று இல்லைதானே என்று புலம்ப வைத்து விட்டார்களே. சிலர் கூறுவதுபோல பணம் என்றால் நாட்டுப்பற்றும் பறந்து போமோ ?
இல்லை பாமரர்கள் நாம்தான் உணர்ச்சிவயப் படுகிறோமா?்்ளதளள்ள்
்கல்வெட்டு: ..and he is a chief mentor for infosys...
பதிந்தது மணியன் நேரம் 16:06 என்றும் சுட்டிட 4 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: இந்தியா, நாட்டுப்பற்று
லிஸ் ஹர்லி அருண் இந்தியக் கல்யாணம்
இந்தியாவில் வந்து ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த ஆடம்பர கல்யாணத்தின் படக் காட்சிக் கோவை:
படத்தைக் 'கிளிக்'குக!
பதிந்தது மணியன் நேரம் 16:37 என்றும் சுட்டிட 3 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: இந்தியா, பிரபலங்கள்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா ?
மைய அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) விவசாய நிலங்களை பெருந்தனக்காரர்கள் அபகரிப்பதற்கான வழிவகை என்ற கூற்றை இந்த நேர்காணலில் அரசின் வணிகச் செயலரும் சி.பொ.ம ஒப்புதல் ஆணையத்தின் தலைவருமான ஜிகே பிள்ளை மறுதளிக்கிறார். அரசு தரப்பு வாதங்களை அறிய அவரது உரையாடல் வழிவகுத்தாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவரது எதிர்வினைகள் ஒரு தொழிலதிபரின் பார்வையிலேயே உள்ளன. உதாரணமாக ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை அரசு கையகப் படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளும் நீச்சல்குளங்களும் கட்டுவது சரியா என்ற கேள்விக்கு
One of the common allegations against SEZ is that industrialists are padding up demand to get land. There is an allegation against Tata that in Singur they need much less than 1,000 acres. How can you take away land that has great emotional value for people under the pretext of designer swimming pools and artificial landscapes?அவர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகள், அவர்களுக்குக் கிடைக்கும் ஈட்டுப்பணம் அவர்களது நிலமிழப்பை மறக்கச் செய்துவிடும் என்கிற பொருளில் கூறியிருப்பது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
There is a study that shows that most farmers whose land is being acquired are subsistence farmers. I am not denying that they have an attachment to land and all that. But do you want them to continue to be a subsistence farmer and earn $1 a day? Or you want to give them an opportunity to move out of it?
No country in the world where 65 per cent of the population is dependent on agriculture can be helped to raise their income.
There is a limit to how much you can improve their income by tilling one acre of land. Industrial development takes place not only for these 650 million farmers, but everybody.
உழவும் தொழிலும் நாட்டின் இரு கண்கள். ஒன்றை இழந்து மற்றொன்றை வளர்ப்பது வேண்டுமா ?
பதிந்தது மணியன் நேரம் 18:47 என்றும் சுட்டிட 3 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: பொருளாதாரம்
வலையுலக சேற்றிற்கு எதிராக இராகுல்காந்தி வழக்கு
பஜரங் தள வலைத்தளமான Hinduunity.org இன் ரோஹித் வியாஸ்மான் மற்றும் போடேக்கு எதிராக தவறான செய்திகளை வெளியிடுவதாக இராகுல் காந்தி மானநட்ட வழக்கு தொடுத்துள்ளார். அமேதி தொகுதி யில் அவரது நடவடிக்கைகளைக் குறித்த அந்த செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சாங்க்வி கூறியுள்ளார். இது பற்றிய யாஹூ செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் இதுபற்றி கருத்துக் கூறமறுப்பதை சுட்டியிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் அமெரிக்க வார இதழ் நியூஸ்வீக் அவர் பட்டதாரி என்பதும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதும் உண்மையில்லை என்று வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
பதிந்தது மணியன் நேரம் 18:03 என்றும் சுட்டிட 3 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: அரசியல்
Best-selling author Sidney Sheldon dead at 89
தனது எழுத்துக்களால் புத்தக விற்பனையில் சாதனைகள் படைத்த நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் தமது 89 ஆவது வயதில் கலிஃபோர்னியாவில் மறைந்தார். அவரது நாவல்கள் உலக அரசியல்பின்ணனியில் விறுவிறுப்பாக அமைந்திருந்தது அவரது புகழிற்கு காரணமாக அமைந்தது. அவரது 18 நாவல்களும் 300 மிலியன் பிரதிகளுக்கும் மேலாக விற்று சாதனை படைத்துள்ளன. தனது ஆரம்ப வாழ்வில் திரைக்கதை ஆசிரியராக வேலை பார்த்து ஆஸ்கார் பரிசு பெற்றதும் குறிப்பிடத் தகுந்தது.
அவரின் மறைவிற்கு எமது அஞ்சலிகள்.
பதிந்தது மணியன் நேரம் 12:06 என்றும் சுட்டிட 9 மறுமொழிகள்
தினகரனே, திரும்பி வா !!
தமிழ்மணத்தை நுகர்வோருக்கும் தேன்கூட்டில் மது களிப்போருக்கும் வலையுலக வாசகர்களுக்கும் மணிமலரின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
பழையன கழித்தலும் புதிய வருடத்தை வரவேற்பதும் சோறளித்த கதிரவனுக்கும் காளைகளுக்கும் வந்தனை செய்வதுமாய் களித்திருக்கும் நாளில் புத்தாடையுடுத்தி புது அரிசிகொண்டு பொங்கும் பொங்கல்போல் மங்காத வளம் சேர மீண்டும் வாழ்த்துகிறேன் !!
பதிந்தது மணியன் நேரம் 18:29 என்றும் சுட்டிட 6 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: Pongal, பொங்கல், வாழ்த்துக்கள்
கணினி படுத்தும் பாடு !
இன்று வந்த ஒரு மின்னஞ்சல் 2020இல் நமது தனிநபர் விவரம் (Privacy) என்ன பாடுபடும் என்று விவரிக்கிறது. ஆங்கிலத்தில் வந்ததை மொழிபெயர்த்து சோதிப்பதை விட அப்படியே கொடுத்து விடுகிறேன். (அதுதான், தமிழ்மணத்திற்குள் நுழைந்தாகி விட்டதல்லவா ;)
பயனாளர் சேவை 2020
Operator : "Thank you for calling Pizza xxx . May I have your..."
Customer: "Heloo, can I order.."
Operator : " Can I have your multi purpose card number first, Sir?"
Customer: " It's eh..., hold.......... on......889861356102049998-45
Operator : " OK... you're... Mr Singh and you're calling from 17 Jalan
Kayu. Your home number is 4094! 2366, your office 76452302 and your mobile
is 0142662566. Which number are you calling from now Sir?"
Customer: "Home! How did you get all my phone numbers?
Operator : "We are connected to the system Sir"
Customer: "May I order your Seafood Pizza..."
Operator : "That's not a good idea Sir"
Customer: " How come?"
Operator : "According to your medical records, you have high blood
pressure and even higher cholesterol level Sir"
Customer: "What?... What do you recommend then?"
Operator : "Try our Low Fat Hokkien Mee Pizza. You'll like it"
Customer: "How do you know for sure?"
Operator : "You borrowed a book entitled "Popular Hokkien Dishes" from
the National Library last week Sir"
Customer: "OK I give up... Give me three family size ones then, how much
will that cost?"
Operator : "That should be enough for your family of 10, Sir. The total
is $49.99"
Customer: "Can I pay by! credit card?"
Operator : "I'm afraid you have to pay us cash, Sir. Your credit card is
over the limit and you owe your bank $3, 720.55 since October last year.
That's not including the late payment charges on your housing loan,
Sir."
Customer: "I guess I have to run to the neighbourhood ATM and withdraw
some cash before your guy arrives"
Operator : "You can't Sir. Based on the records,you've reached your
daily limit on machine withdrawal today"
Customer: "Never mind just send the pizzas, I'll have the cash ready.
How long is it gonna take anyway?"
Operator : "About 45 minutes Sir, but if you can't wait you can always
come and collect it on your motorcycle..."
Customer: " What!"
Operator : "According to the details in system ,you own a
Scooter,...registration number 1123..."
Customer: " ????"
Operator : "Is there anything else Sir?"
Customer: "Nothing... by the way... aren't you giving me that 3 free
bottles of cola as advertised?"
Operator : "We normally would Sir, but based on your records you're also
diabetic....... "
Customer: #$$^%&$@$%^
Operator "Better watch your language Sir. Remember on 15th July 1987 you
were convicted of using abusive language on a policeman...?"
Customer: [Faints]
___________________
பதிந்தது மணியன் நேரம் 16:47 என்றும் சுட்டிட 1 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: நகைச்சுவை
பேப்பர் கிளிப்
காகித தாள்களை ஆரம்ப காலங்களில் கயிறு மூலமாகவேவலது மூலையில் கட்டி தொகுத்து வந்தனர். அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்த பழக்கத்தை 1835இல் ஹோவெ என்பவர் குண்டூசி பின் மூலம் மாற்றினார். இதை அடுத்து 1901இல் யோகன் வாலீர், தற்போதைய தாளிணைப்பை, பேப்பர் கிளிப், உருவாக்கினார். ஒரு நேரான கம்பியை முனைகளில் வளைத்து உதிரி தாள்களை ஒருங்கிணைத்தார். எளிமையான சிந்தனை. செய்வதற்கும் எளிமையானது. உலகை வெல்ல இதுதானே தாரக மந்திரம்.
Cushman & Denison 1904இல் 'ஜெம்' என்ற பெயரை காப்புரிமை செய்தனர்.அதுவே பொதுபெயராக மாறி இன்று எந்த நிறுவனம் தயாரித்தாலும் அவை ஜெம் கிளிப்புகள் என்றே அழைக்கப் படுகின்றன.
பதிந்தது மணியன் நேரம் 19:45 என்றும் சுட்டிட 0 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: பொது அறிவு
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
இப்பதிவிற்கு வருகை தந்த அன்பான நேயருக்கு, எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய வாழ்த்துக்கள் !!
=மணியன்
பதிந்தது மணியன் நேரம் 17:22 என்றும் சுட்டிட 1 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: வாழ்த்துக்கள்