Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

வலையுலக சேற்றிற்கு எதிராக இராகுல்காந்தி வழக்கு


பஜரங் தள வலைத்தளமான Hinduunity.org இன் ரோஹித் வியாஸ்மான் மற்றும் போடேக்கு எதிராக தவறான செய்திகளை வெளியிடுவதாக இராகுல் காந்தி மானநட்ட வழக்கு தொடுத்துள்ளார். அமேதி தொகுதி யில் அவரது நடவடிக்கைகளைக் குறித்த அந்த செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சாங்க்வி கூறியுள்ளார். இது பற்றிய யாஹூ செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் இதுபற்றி கருத்துக் கூறமறுப்பதை சுட்டியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் அமெரிக்க வார இதழ் நியூஸ்வீக் அவர் பட்டதாரி என்பதும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதும் உண்மையில்லை என்று வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.