வலையுலக சேற்றிற்கு எதிராக இராகுல்காந்தி வழக்கு
பஜரங் தள வலைத்தளமான Hinduunity.org இன் ரோஹித் வியாஸ்மான் மற்றும் போடேக்கு எதிராக தவறான செய்திகளை வெளியிடுவதாக இராகுல் காந்தி மானநட்ட வழக்கு தொடுத்துள்ளார். அமேதி தொகுதி யில் அவரது நடவடிக்கைகளைக் குறித்த அந்த செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சாங்க்வி கூறியுள்ளார். இது பற்றிய யாஹூ செய்தியில் காங்கிரஸ் தலைவர்கள் இதுபற்றி கருத்துக் கூறமறுப்பதை சுட்டியிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் அமெரிக்க வார இதழ் நியூஸ்வீக் அவர் பட்டதாரி என்பதும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதும் உண்மையில்லை என்று வெளியிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
3 மறுமொழிகள்:
ராகுல் காந்தியின் கற்பழிப்பு குற்றச்சாட்டைப்பற்றிய இந்த செய்தியை நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
ராகுல் காந்தியின் மான நஷ்ட வழக்கு சும்மா பம்மாத்து. "அமேதி குறித்த தகவல்களில் ஒரு ஆதாரமும் இல்லை" என்பது வார்த்தை விளையாட்டு. அது கோர்ட்டில் கற்பழிப்பு வழக்கில் நிரூபீக்க வேண்டியது.
இங்கு செய்தியில் ஒரு தாயும் மகளும், மகளை ராஜீவ் காந்தி கற்பழித்தார் என்று சொன்னதாகவும், அந்த புகாரை பதியாமல் தடுக்க போலீஸ், காங்கிரஸ் பார்ட்டி முயன்றதாகவும்தான் தகவல். அது உண்மையா இல்லையா என்று ராகுல் சொல்லவில்லை.
இந்த செய்தி தொடர்பாக அந்த பெண்ணின் படம் மற்றும் பல தலைவர்களின் செய்திகள் வந்துள்ளன.
உ.பி தேர்தல் வேகமாக வருவதும் புரிந்து கொள்ள முடிகிறது...
முந்தைய பின்னூட்டத்தில் ராஜீவ் காந்தி என்று ஒரு இடத்தில் எழுதிவிட்டேன். அது ராகுல் காந்தியை குறிக்கிறது. மன்னிக்கவும்
ஐயோ சாமி ஆளைவிடு. பெரிய இடத்து சமாச்சாரம். நான் பார்க்கவும் இல்ல, எனக்கு எதுவும் தெரியது சாமி. கற்பளிப்பா? கறுத்த புனை என்னை பார்த்துகிட்டே இருக்கு.
மறுமொழியிட