சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தேவையா ?
மைய அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZs) விவசாய நிலங்களை பெருந்தனக்காரர்கள் அபகரிப்பதற்கான வழிவகை என்ற கூற்றை இந்த நேர்காணலில் அரசின் வணிகச் செயலரும் சி.பொ.ம ஒப்புதல் ஆணையத்தின் தலைவருமான ஜிகே பிள்ளை மறுதளிக்கிறார். அரசு தரப்பு வாதங்களை அறிய அவரது உரையாடல் வழிவகுத்தாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு அவரது எதிர்வினைகள் ஒரு தொழிலதிபரின் பார்வையிலேயே உள்ளன. உதாரணமாக ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை அரசு கையகப் படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளும் நீச்சல்குளங்களும் கட்டுவது சரியா என்ற கேள்விக்கு
One of the common allegations against SEZ is that industrialists are padding up demand to get land. There is an allegation against Tata that in Singur they need much less than 1,000 acres. How can you take away land that has great emotional value for people under the pretext of designer swimming pools and artificial landscapes?அவர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகள், அவர்களுக்குக் கிடைக்கும் ஈட்டுப்பணம் அவர்களது நிலமிழப்பை மறக்கச் செய்துவிடும் என்கிற பொருளில் கூறியிருப்பது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
There is a study that shows that most farmers whose land is being acquired are subsistence farmers. I am not denying that they have an attachment to land and all that. But do you want them to continue to be a subsistence farmer and earn $1 a day? Or you want to give them an opportunity to move out of it?
No country in the world where 65 per cent of the population is dependent on agriculture can be helped to raise their income.
There is a limit to how much you can improve their income by tilling one acre of land. Industrial development takes place not only for these 650 million farmers, but everybody.
உழவும் தொழிலும் நாட்டின் இரு கண்கள். ஒன்றை இழந்து மற்றொன்றை வளர்ப்பது வேண்டுமா ?
3 மறுமொழிகள்:
நல்ல கேள்வி.... மானத்தை இழந்து நாட்டை கூட்டிக் கொடுத்தாவது வாழ்க்கை ஓட்டுவதில் தப்பில்லை என்று இங்கு ஜல்லியடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.
அசுரன்
சி.பொ.ம. கட்டாயம் தேவை. இதனால் உண்டாகும் சில இடையூறுகள் தவிர்க்க்க முடியாதவை. அதற்காக கால ஓட்டத்தில் இருந்து விளகி ஓரமாக ஒதுங்கி வாழ முடியாது.
நன்றி அசுரன், மாசிலா.
உங்கள் இருவரின் பின்னூட்டமும் இந்த விவாதத்தின் இருமுனைகளை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. இந்த காலக்கட்டத்திற்கு சி.பொ.ம. தேவைதான் எனினும் அரசின் பொறுப்பு மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடையாத வண்ணமும் பொருளாதாரத்தின் அனைத்து கூறுகளும் பங்கேற்கும் வண்ணம் கட்டுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். வெறும் முதலீட்டாளர்களிடம் வளர்ச்சியை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது.
மறுமொழியிட