சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

கதிரவன் மேட இராசியில் காலடி வைக்கின்ற சித்திரை முதல்நாளிலே பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வசந்தத்தின் நுழைவாயில் வாழ்விலும் வசந்தம் வீச வழிகோலட்டும்;
விரும்பியன வாய்த்தலும் வெற்றிகள் வந்தடைதலும் வேலவன் அருளால் நிறைவேறட்டும்!!

தேசப்பற்று பற்றாக்குறை ?



இந்தியாவின் இரண்டு பிரபலங்களின் நடத்தையைக் கண்டு திகைத்து நிற்கிறது நாடு. கிரிக்கெட் இந்தியாவின் சமயம் என்றால் டெண்டுல்கர் எங்கள் தெய்வம் எனக் கொண்டாடியவர்களும் புதிய இந்தியாவின் சிற்பி, நாராயணமூர்த்தி எங்கள் வருங்கால குடியரசுத் தலைவர் என்று கொண்டாடியவர்களும் முக்காடு போட்டு திரிய வேண்டியதாயிற்று.

சச்சின் தேசியக் கொடி வண்ண கேக்கை வெட்டினாராம்; நாராயணமூர்த்தி நாட்டுப்பண்ணை மற்றவர்களுக்கு முன் பாட தயங்கினாராம். இருவருமே தங்களது ஊடகத்தினால் வளர்க்கப் பட்ட மாயபிம்பத்தை தக்கவைத்துக் கொள்ள விளக்கங்களும் மன்னிப்புகளும் அளித்துள்ளனர்.

தனது ஹெல்மெட்டில் நாட்டுக் கொடியின் வண்ணங்கள் பதிய போராடிய டெண்டுல்கரா இவ்வாறு நடக்கக் காரணங்கள் என்ன ? இந்திய பொருளாதாரத்திற்கே ஒரு வழிமாற்றம் தந்து தற்போதைய குடியரசுத்தலைவராலேயே அடுத்து அவர் வருவதற்கு 'fantastic '
என பாராட்டு பெற்றவர் தடுமாற காரணம் என்ன ? மக்கள் தங்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை மறந்திருந்தாலும் உள்ளத்தில் நாட்டுப்பற்று இல்லைதானே என்று புலம்ப வைத்து விட்டார்களே. சிலர் கூறுவதுபோல பணம் என்றால் நாட்டுப்பற்றும் பறந்து போமோ ?

இல்லை பாமரர்கள் நாம்தான் உணர்ச்சிவயப் படுகிறோமா?்்ளதளள்ள்

கல்வெட்டு: ..and he is a chief mentor for infosys...