Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

கதிரவன் மேட இராசியில் காலடி வைக்கின்ற சித்திரை முதல்நாளிலே பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வசந்தத்தின் நுழைவாயில் வாழ்விலும் வசந்தம் வீச வழிகோலட்டும்;
விரும்பியன வாய்த்தலும் வெற்றிகள் வந்தடைதலும் வேலவன் அருளால் நிறைவேறட்டும்!!

தினகரனே, திரும்பி வா !!

தமிழ்மணத்தை நுகர்வோருக்கும் தேன்கூட்டில் மது களிப்போருக்கும் வலையுலக வாசகர்களுக்கும் மணிமலரின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!

பழையன கழித்தலும் புதிய வருடத்தை வரவேற்பதும் சோறளித்த கதிரவனுக்கும் காளைகளுக்கும் வந்தனை செய்வதுமாய் களித்திருக்கும் நாளில் புத்தாடையுடுத்தி புது அரிசிகொண்டு பொங்கும் பொங்கல்போல் மங்காத வளம் சேர மீண்டும் வாழ்த்துகிறேன் !!

பொங்கலோப் பொங்கல் !!

புத்தாண்டு வாழ்த்துக்கள் !



இப்பதிவிற்கு வருகை தந்த அன்பான நேயருக்கு, எதிர்வரும் புத்தாண்டு இனிமையாகவும் வளமையாகவும் அமைய வாழ்த்துக்கள் !!

=மணியன்