Best-selling author Sidney Sheldon dead at 89
தனது எழுத்துக்களால் புத்தக விற்பனையில் சாதனைகள் படைத்த நாவலாசிரியர் சிட்னி ஷெல்டன் தமது 89 ஆவது வயதில் கலிஃபோர்னியாவில் மறைந்தார். அவரது நாவல்கள் உலக அரசியல்பின்ணனியில் விறுவிறுப்பாக அமைந்திருந்தது அவரது புகழிற்கு காரணமாக அமைந்தது. அவரது 18 நாவல்களும் 300 மிலியன் பிரதிகளுக்கும் மேலாக விற்று சாதனை படைத்துள்ளன. தனது ஆரம்ப வாழ்வில் திரைக்கதை ஆசிரியராக வேலை பார்த்து ஆஸ்கார் பரிசு பெற்றதும் குறிப்பிடத் தகுந்தது.
அவரின் மறைவிற்கு எமது அஞ்சலிகள்.
9 மறுமொழிகள்:
அடப்பாவமே.. இனிமே சிட்னி புது நாவல் எதுவும் வராதா!! :((
ooh.. he is one of my favourite author.. his "Windmills of God" & "The Naked Face" are my favourites..
ஆமாங்க, எங்களைப் போன்ற பொதுமக்களுக்கு பேரிழப்புதான் :(
வாங்க மனதின் ஓசை, எனக்கும் அவை மிகப் பிடித்தவைதான்.
மணியன் ஐயா,
தகவலுக்கு மிக்க நன்றிகள்.
ஆழ்ந்த அனுதாபங்கள். இதுவரை நான் இவரின் படைப்புக்களைப் படித்ததில்லை. நான் அதிகமாக வாசிப்பது அரசியல், போராட்ட வரலாற்று நூல்களை. இருப்பினும் நீங்கள் சொன்னது போல் எழுத்தாளர்கள் மரணிக்கும் போது "பொதுமக்களுக்குத் பேரிழப்புதான்"
அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்!!!
என்ன 18 நாவல்கள்தான் எழுதினாரா?
அவர் வயதைப் பார்க்கும்போது குறைவாக இருக்கிறதே!
நன்றி வெற்றி, வெட்டிப்பயல், sp.vr.சுப்பையா அவர்களே.
2 நாட்களுக்கு முன்னால் தான் அவரோட 'Bloodline' படிச்சு முடிச்சேன்.
:(((
--VENDAN
மறுமொழியிட