பேப்பர் கிளிப்


காகித தாள்களை ஆரம்ப காலங்களில் கயிறு மூலமாகவேவலது மூலையில் கட்டி தொகுத்து வந்தனர். அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்த பழக்கத்தை 1835இல் ஹோவெ என்பவர் குண்டூசி பின் மூலம் மாற்றினார். இதை அடுத்து 1901இல் யோகன் வாலீர், தற்போதைய தாளிணைப்பை, பேப்பர் கிளிப், உருவாக்கினார். ஒரு நேரான கம்பியை முனைகளில் வளைத்து உதிரி தாள்களை ஒருங்கிணைத்தார். எளிமையான சிந்தனை. செய்வதற்கும் எளிமையானது. உலகை வெல்ல இதுதானே தாரக மந்திரம்.

Cushman & Denison 1904இல் 'ஜெம்' என்ற பெயரை காப்புரிமை செய்தனர்.அதுவே பொதுபெயராக மாறி இன்று எந்த நிறுவனம் தயாரித்தாலும் அவை ஜெம் கிளிப்புகள் என்றே அழைக்கப் படுகின்றன.

0 மறுமொழிகள்:

திரட்ட: இப்பதிவின் மறுமொழிகள் (Atom)