தொலைத்த இடம் தேடுகிறேன் !

இன்று வந்த மின்னஞ்சலில் இந்த புதிரைப் பார்த்தேன். மின்னஞ்சல்படி MIT பேராசிரியர் ஒருவர் (Pro. John Mentriffe) இந்தப் புதிரை வெளியிட்டதாகத் தெரிகிறது. அவர் நாம் கற்ற செங்கோண முக்கோணங்களின் விதிகளை யெல்லாம் கட்டுடைக்கும் புதிய கொள்கையை விளக்கும் விதமாக இந்தப் புதிரை கொடுத்துள்ளாராம்.


கணிதப்புலிகள் உலாவும் தமிழ் பதிவுலகில் இதில் எங்கு வழு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடுகையை இடுகிறேன். விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

4 மறுமொழிகள்:

MSATHIA கூறுகிறார்

நல்ல புதிர். ஆனால் சரியான படமில்லை. மேலேவுள்ள படத்தில் பச்சைமுக்கோண இடது மூலை ஒரு கட்டத்து மூலையில் முடிகிறது பாருங்கள். அதே செங்கத்து கோட்டைபிடித்து கீழே வாருங்கள். இரண்டாவது முக்கோணதின் சாய்வுக்கோடு அந்த கட்டத்து மூலையில்
செல்லாமல், கொஞ்சம் மேலே செல்கிறது. அதாவது முக்கோணத்தின் சாய்வுக்கோட்டின் பாகை கொஞ்சம் அதிகம்.

Anonymous கூறுகிறார்

hi,

i think this is the ans...

total area of triangle = 0.5xbxh = 0.5x13x5 = 32.5

i) config : total area = 0.5x8x3 + 7 + 8 + 0.5x5x2 = 12 + 7 + 8 + 5 = 32.0
error wrt original = (-)0.5

ii) config : total area = 0.5x5x2 + 8 + 7 + 0.5x8x3 + 1(blank area)
= 5 + 8 + 7 + 12 + 1 = 33.0
error wrt original = (+)0.5

difference in areas = 33.0 -32.0 = 1.0 (blank area)

hence the original 13x5 triangle cannot be split up as in the config (i) or (ii) i.e., round value area squares (any one form shold have fraction of 0.5)

யோசிப்பவர் கூறுகிறார்

//அவர் நாம் கற்ற செங்கோண முக்கோணங்களின் விதிகளை யெல்லாம் கட்டுடைக்கும் புதிய கொள்கையை விளக்கும் விதமாக இந்தப் புதிரை கொடுத்துள்ளாராம்.
//
இதெல்லாம் ஓவர் கப்ஸா.

இது ஒரு காட்சிப்பிழை. அவ்வளவுதான். முதல் படத்தில் உள்ள முக்கோணங்களை வெட்டி எடுத்து இரண்டாவதில் உள்ளது போல் சேர்க்க முயன்று பாருங்கள். மிகச்சரியாக சேராது.

இரண்டாவது முக்கோணமே கிடையாது.அது ஒரு Quadrilateral


பி.கு:
இதை நான் ஏற்கெனவே பதிந்திருக்கிறேன். கீழே சுட்டிப் பாருங்கள்
http://yosinga.blogspot.com/2004/12/blog-post_07.html

மணியன் கூறுகிறார்

நன்றிகள் சத்தியா, எமெர்சன் ஜகப், மற்றும் யோசிப்பவர்.

எமெர்சன் - கணித ஆசிரியரா ? நன்றாக விளக்கி இருக்கிறீர்களே ;)

//இதெல்லாம் ஓவர் கப்ஸா.//
அந்த மின்னஞ்சல் வாசகத்திலிருந்தே யூகித்திருந்தேன். இருப்பினும் ஒரு சுவாரசியமான புதிராக இருக்கவேதான் இட்டேன். உங்கள் இடுகைகளைப் பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தேன். இம்மாதிரி புதிர்களுக்காகவே ஒரு பதிவிடுகிறீர்களே :)

திரட்ட: இப்பதிவின் மறுமொழிகள் (Atom)