தொலைத்த இடம் தேடுகிறேன் !
இன்று வந்த மின்னஞ்சலில் இந்த புதிரைப் பார்த்தேன். மின்னஞ்சல்படி MIT பேராசிரியர் ஒருவர் (Pro. John Mentriffe) இந்தப் புதிரை வெளியிட்டதாகத் தெரிகிறது. அவர் நாம் கற்ற செங்கோண முக்கோணங்களின் விதிகளை யெல்லாம் கட்டுடைக்கும் புதிய கொள்கையை விளக்கும் விதமாக இந்தப் புதிரை கொடுத்துள்ளாராம்.
கணிதப்புலிகள் உலாவும் தமிழ் பதிவுலகில் இதில் எங்கு வழு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடுகையை இடுகிறேன். விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.