வியாழன், 31 மே 2007

தொலைத்த இடம் தேடுகிறேன் !

இன்று வந்த மின்னஞ்சலில் இந்த புதிரைப் பார்த்தேன். மின்னஞ்சல்படி MIT பேராசிரியர் ஒருவர் (Pro. John Mentriffe) இந்தப் புதிரை வெளியிட்டதாகத் தெரிகிறது. அவர் நாம் கற்ற செங்கோண முக்கோணங்களின் விதிகளை யெல்லாம் கட்டுடைக்கும் புதிய கொள்கையை விளக்கும் விதமாக இந்தப் புதிரை கொடுத்துள்ளாராம்.


கணிதப்புலிகள் உலாவும் தமிழ் பதிவுலகில் இதில் எங்கு வழு இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடுகையை இடுகிறேன். விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

வெள்ளி, 4 மே 2007

அமெரிக்க பதிவர்களுக்கு 12 கட்டளைகள்

அமெரிக்க சட்டங்களை மீறாமல் பதிவுகள் எழுத கீழ்வரும் சுட்டியில் பனிரெண்டு சட்டங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன. நேரமின்மையால் மொழி பெயர்க்க வில்லை. மன்னிக்கவும்.
Blog Law » 12 Important U.S. Laws Every Blogger Needs to Know

இது அமெரிக்கபதிவர்கள் என்றில்லாமல் நம் அனைவருக்குமே பொருந்தும். இதுபற்றி /. இல் நடக்கும் விவாதம் இது. நமது ஆக்கங்கள் பிற பதிவுகளையோ பிற ஊடக உள்ளடக்கங்களை சு(ட்)டும் போது கை சுட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர பதிவிற்கு வருவோரின் தனிப்பட்ட விவரங்களை பதிவதிலும் பகிர்வதிலும் கவனம் தேவை.